Lyrics ads1

Wednesday, July 6, 2016

கருவிலே களைந்த கண்மணியே ..!!

 இது என் வாழ்க்கையின் பின்புலம் .


கருவிலே களைந்த கண்மணியே ..!!  

களைந்து போகாத மேகங்கள்
களைந்து போகலாம் ,

காற்று கூட நிறம் மாறி
கண்ணில் தெரியலாம் ,

நீல வானம் நிலா இல்லாமல்
நீந்தி போகலாம் ,

கடல் நீர் கூட ஒற்றை துளியாய்
வற்றி போகலாம் ,

என் மகள் பிறக்காமலே
இறந்து போகலாமா இறைவா ..!!!

இருட்டில் சலனமின்றி உருவாகிய
என் சாதி மல்லியே

நீ பூக்காமல் எப்படி சருகாய் போனாய்
வேருகள் தண்ணீர் தர மறுத்துவிட்டதா ?
இல்லை காற்று உன் கருவை களைத்து விட்டதா ?

ஒரு வார்த்தை என்னிடம் சொல்லி இருந்தால்
என் மகளே , என் வியர்வை துளியை
உன் வேர்களுக்கு தண்ணீராய் ஊற்றி இருப்பேன் .

நீ பூக்க போகும் நாட்களை எண்ணியே
பூரித்து போனவன் நான் – ஆனால்

நீ பூக்காமலும் சருகாய் போனது
விந்தையிலும் விந்தையடி என் மகளே ..!!

உன் கண் அழகு எப்படியோ
உன் கழுத்து அழகு எப்படியோ
நான் அறியேன் ..

கற்பனையில் நீ அழகி என
நான் வடித்த கவிதை எல்லாம்
கனவாய் போனதடி ...நான் கவிஞன் இல்லையடி .

நீ ஓடி விளையாட
கட்டாந்தரை கூட்டி வச்சேன்
நீ புடுச்சு விளையாட
ஒரு ஆட்டு குட்டி கட்டி வச்சேன்
ஆட்டு பால் குடுச்சா அறிவு வளராதுன்னு
பசு மாடு வாங்க பணம் எல்லாம்
சேத்து வச்சேன் ,

என் தோளோடு கட்டி கொண்டு
பாத்து ரசிக்க
தொலைக்காட்சி பெட்டி ஒன்னு
கோட்டையிலே மாட்டி வச்சேன் ,

கோடையிலே குளு குளுன்னு நீ குடிக்க
குளிர்சாதன பெட்டி ஒன்னு
வீட்டுக்கு நடுவே வேறு இல்லாம நட்டு வச்சேன் .

எத்தனையோ செஞ்சு வச்சேன் என் மகளே ,
நீ கை கால் முளைக்காமே
கன்ன சிமிட்டாமே , கதறி அழுகாமே
காலம் தவறி, கர பட்ட ரத்தமாய்
மெய் இன்றி பொய்யாக போனையடி

சுட்ட மணல் கூட சூடாறி போனதடி
சுடா என் நெஞ்சம் நெருப்பாக வலிக்குதடி ,

நீ சனுச்ச நாள் முதலே
சனி வந்து செந்துருச்சோ – இல்லை
பிணி வந்து செந்துருச்சோ ,
தெருஞ்சோ தெரியாமே தப்பு ஏதும் நடந்திருச்சோ
ஒன்னும் புரியலேயே , ஒலகம் தெரியலையே
ஒன்னே ஒழுங்கா பெத்தெடுக்க
வழி ஒன்னு தெரியலையே ...!!

இடுப்பு வழி எடுக்காம
தண்ணி குடம் உடையாமே
தாய் கத்தாமே , தாமரங்காய் தளராம
வேர்த்து கொட்டாமே , வெறு வாய் மெல்லாமே

நீ பத்து மாசம் வளராமே
பாதி மாசம் துங்காமே
மூணு மாசத்துல ரணமாய் பிறந்து
ரத்தமாய் போனையடி என் மகளே ..

ஓடி ஓடி உழைத்ததெல்லாம்
உனக்க தானடி ....
ஊர் ஊராய் போனதெல்லாம்
உன்னை காப்பாற்ற தானடி .

காடு கொள்ளாமே கன மழை பெயலையே
வீடு கொள்ளாமே வெளச்சல் வந்து சேரலையே
பாதியிலே நீ போனதாலே
ஊர் வாயி மேள்ளலையே

வடுச்ச சோறும் வடிக்காத கொழம்பும்
இடுச்ச மிளகும் வேடுச்ச கடுகும்
கொதிச்ச மீனும் கொதிக்காத ரசமும்
உண்டு வளத்தா உன் தாய்

தண்ணி தூக்காம , தரையில படுக்காமே
எட்டு வச்சு நடக்காமே ,ஏரியில குளிக்காமே
காட்டுக்கு போகாம கல்லடி படமே
வைத்துக்குள்ள உன்னையும்
கண்ணுக்குள்ள என்னையும்
பாத்து வளத்த உன் தாய் – ஆனா
பாதியிலே நீ போவையினு
பாவி மகா நினைக்கலையே

பட்டு சட்டை தச்சு
பாவடை ரெண்டு தச்சு
பாதையில நீ நடந்து போக
பகல் கனவு நானும் கண்டேன்

தாழ்வாரம் சரி பண்ணி
மழ தண்ணி ஒழுகாம
மறுபடியும் ஓடு அடுக்கி
உத்தரத்து ஓரத்துல
தொட்டி ஒன்னு கட்ட
இடம் ஒன்னு ஒதிக்கி வச்சேன்
அதுல இடி வந்து விழுந்துருச்சே ...!!!  


-                                                       -   தவம் 

Thursday, July 30, 2015

The First Tamil Kummi Song for Dr.APJ Abdul Kalam ..!!!தலைப்பு : கலாம் காலத்தை வென்றவராம் ..!!
வகை    : கும்மி பாடல்
பாடலாசிரியார் : தவம் .

எங்க ஊரில் பிறந்தவராம் கலாம்
எல்லாருக்கும் சிறந்தவராம்
கடை கோடியில் பிறந்தவராம் கலாம்
காலத்தை வென்றவராம் ...
எங்க....
எங்க ....
எங்க ஊரில் பிறந்தவராம் கலாம்
எல்லாருக்கும் சிறந்தவராம்......,
தன்ன நான்னே தன்னனானே ...கலாம்
காலத்தை வென்றவராம் ...

உலகம் சுற்றி வந்தவராம் கலாம்
உலக புகழ் கொண்டவராம் ...
ஊர் போற்றும் உத்தமராம் கலாம்
இமையம் போல உயர்ந்தவராம் ...
போடு ....
தன்ன நான்னே தன்னனானே ...கலாம்
காலத்தை வென்றவராம் ...

விண்வெளியை பிளந்தவராம்.. கலாம்
விவேகம் கொண்டவராம் ..
நாசாவை வென்றவராம் ...கலாம்
நல்ல உள்ளம் கொண்டவராம்
போடு ....
தன்ன நான்னே தன்னனானே ...கலாம்
காலத்தை வென்றவராம் ...

கனவு காண சொன்னவராம் ..கலாம்
கள்ளம் கபடம் அற்றவராம் ..
விருதுகளை பெற்றவராம் ..கலாம்
விஞ்ஜானம் கற்றவராம்
போடு ....
தன்ன நான்னே தன்னனானே ...கலாம்
காலத்தை வென்றவராம் ...

அணுகுண்டு சோதனையில் ..கலாம்
உலகையே அலற வைத்தவராம்
பொது நலம் கொண்டவராம் ..கலாம்
பொன்மொழிகள் தந்தவராம்
போடு ....
தன்ன நான்னே தன்னனானே ...கலாம்
காலத்தை வென்றவராம் ...

குழந்தை உள்ளம் கொண்டவராம்.. கலாம்
பதவி ஆசை அற்றவராம்
நமக்குள்ளே வாழ்பவராம் ..கலாம்
நன்மைகளை செய்தவராம்
போடு ....
தன்ன நான்னே தன்னனானே ...கலாம்
காலத்தை வென்றவராம் ...
எங்க ஊரில் பிறந்தவராம் கலாம்
எல்லாருக்கும் சிறந்தவராம்
கடை கோடியில் பிறந்தவராம் கலாம்
காலத்தை வென்றவராம் ...
எங்க....
எங்க ....
எங்க ஊரில் பிறந்தவராம் கலாம்
எல்லாருக்கும் சிறந்தவராம்......,
தன்ன நான்னே தன்னனானே ...கலாம்
காலத்தை வென்றவராம் ...

- தவம்

Friday, November 14, 2014

ஜனனத்தின் வலி

ஆண்களும் ஒரு தாய் தான் . நாங்களும் உணர்கிறோம் பெண்களின் வலியை ....Please read and feel. Written by Men (Thavam ) .
ஜனனத்தின் வலி :  

================

உயிர் போகும் வலியை உணர்ந்தேன்
என் கயல்விழி முதல்முறை கண்விழித்த போது ..!!

என் உறுப்பை கிழித்துக்கொண்டு 
அவள் தலை வந்த போது ..." இறந்துவிட்டேன் "

அவள் தலை இந்த பூமி பந்தை தொட்ட போது 
அவளோடு சேர்ந்து நானும் ..." பிறந்துவிட்டேன் "

ஒவ்வொரு தாய்மையின் அடையாளம் 
" மறுபிறவி " என்பதை உணர்ந்தேன் .

என் உடல் சூடானது ....
என் கண்கள் இருண்டு போனது ...
என் இதயம் துடிக்க மறந்து போனது ...
என் நாவு வறண்டு போனது ...
என் சுற்றத்தார் அருகில் இருந்தும் 
நான் தனிமையானேன் ...!!
அவள் ஜனனம் செய்த போது ....

இறப்பை நிர்னைக்கும் 60 டாஸ் வலியை 
தாங்கிகொண்டேன் என்னவளுக்காக ..!!

என் கண்கள் கலங்கி போனது 
என் சிசு என் கை தொட்ட போது 

அவளும் ஜனனத்தின் வலியை உணரும் போது 
எனக்கு பட்டம் கிடைக்கும் ....!!
" பாட்டி " என்று .

ஜனனத்தின் வலி சுகமானது 
அவள் என்னை பார்த்து சிரித்த போது ..

மீண்டும் காத்திருக்கிறேன் ....!!
ஜனனத்தின் வலியை முத்தமிட ..,

- தவம்